முன்மொழியப்பட்டுள்ள சட்டமுன்வரைவில் காணும் முதன்மை கூறுகள்
- நடுவண் அரசு ஊழலெதிர்ப்பு அமைப்பாக "லோக்பால்" (மக்கள் குறைகேட்பு ஆணையம்) நிறுவிடவும் அவருக்குத் துணைபுரிய மாநில அளவில் "லோக் ஆயுக்தா" (மக்கள் குறைகேட்பு அதிகாரி) நிறுவிடவும் வகைசெய்தல்.
- இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் நடுவண் தலைமைச் செயலகம் போல, லோக்பால் இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைச் செயலரால் கண்காணிக்கப்படும். இதன்மூலம் இந்த அமைப்பு அரசின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தனது புலனாய்வுகளில் எந்த அமைச்சரவைகளின் இடையூறும் இன்றி செயல்படும்.
- இதன் உறுப்பினர்கள் ஒளிவற்ற பங்குபெறும் செயல்பாட்டின் மூலம், நீதிபதிகள், தூய்மையான வரலாறுடைய இந்திய அரசு அதிகாரிகள், பொதுநபர்கள் மற்றும் அரசியலமைப்பின் கீழான அதிகாரிகளிலிருந்து நியமிக்கப்படுவர்.
- தேர்வாணைக்குழு ஒன்று குறுக்கப்பட்ட பட்டியலில் உள்ளோரை, பின்னாளில் பொதுவில் கிடைக்கக்கூடிய ஒளிப்பதிவுகளுடன், நேர்முகத் தேர்வு காணுதல்.
- ஒவ்வொரு மாதமும் தனது இணையதளத்தில் லோக் ஆயுக்தா தன்கீழுள்ள வழக்குகளின் பட்டியல், சுருக்கமான விவரங்கள், எடுக்கப்பட்ட செயல்களின் வெளிப்பாடு அல்லது எடுக்கவிருக்கும் செயல்கள் என பதிப்பிக்க வேண்டும்.மேலும் கடந்த மாதத்தில் பெறப்பட்ட குறைகள், நடப்பு மாதத்தில் தீர்வானவை மற்றும் நிலுவையிலுள்ளவை என அறிக்கை வெளியிடவேண்டும்..
- ஒவ்வொரு குறை/வழக்கும் ஓராண்டுக்குள் புலானாய்வு செய்யப்படவேண்டும். குற்ற விசாரணைகள் அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு மொத்தமாக இரண்டாண்டுகளுக்குள் தீர்வு காணப்பட வேண்டும்.
- ஊழல் குற்றவாளியின் தண்டனையின் அங்கமாக அவரால் அரசுக்கு ஏற்பட்ட அனைத்து நட்டங்களையும் ஈடு கட்டுதல் அமைய வேண்டும்.
- ஏதேனும் அரசாங்க வேலை வரையறுக்கப்பட்ட காலக்கெடுவினுள் முடிக்கப்படாவிட்டால், அதற்கு பொறுப்பானவர்கள் மீது "லோக்பால்" நிதி அபராதங்கள் விதித்து குறைபட்டவருக்கு அதனை ஈடாக கொடுக்க வகை செய்தல்.
- லோக்பால் அதிகாரிகள் மீது ஏதேனும் குறைகள் காணப்பட்டால் அவற்றை உடனடியாக ஒரு மாதத்திற்குள் புலனாய்ந்து குற்றம் இருப்பின் இரண்டாவது மாதத்திற்குள் அவர் நீக்கப்பட வேண்டும்.
- தற்போதுள்ள ஊழல் எதிர்ப்பு அமைப்புகளான நடுவண் விழிப்புணர்வு ஆணையம், துறைசார் விழிப்புணர்வு அதிகாரிகள் மற்றும் சிபிஐயின் ஊழல் எதிர்ப்புத்துறை ஆகியன "லோக்பால்" அமைப்போடு இணைக்கப்பட வேண்டும். இதன்மூலம் லோக்பாலுக்கு எந்த அதிகாரி,நீதிபதி அல்லது அரசியல்வாதி குறித்த குறையையும் தன்னிச்சையாகவும் முழுமையாகவும் புலனாய்ந்து தண்டனை வழங்கும் முழுமையான கட்டமைப்பும் அதிகாரமும் கிடைக்கும்.
- லோக்பாலிற்கு ஊழல் பற்றிய தகவல்களைக் காட்டிக் கொடுக்கும் அறிவிப்பாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கும் அதிகாரம் வேண்டும்
Scours:-Wikipdia
No comments:
Post a Comment